புதிதாக உருவாக்கப்படும் அமைச்சரவையில் ஜே.வி.பி! ரணில் தெரிவித்துள்ள விடயம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜே.வி.பி கட்சி அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் சிலரை சந்தித்து அண்மையில் தனிப்பட்ட ரீதியில் பேசிய போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் தெரிவிக்கையில்,

புதிதாக உருவாக்கப்படும் அமைச்சரவையில் எந்த கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டாலும் அந்த அமைச்சரவையில் ஜே.வி.பி உள்வாங்கப்பட வேண்டும்.

ஜே.வி.பிக்கு அமைச்சரவை அந்தஸ்துடைய மூன்று அல்லது நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும்.

ஜே.வி.பி கட்சியினரிடம் சீரிய ஒழுக்கம் உண்டு, அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் மற்றும் அவர்கள் நேர்மையானவர்கள்.

இந்த பண்பியல்புகளின் மூலம் நாட்டுக்கு இதுவரையில் சேவைகள் எதுவும் கிடைக்கவில்லை.

அத்துடன் ஜே.வி.பியின் உறுப்பினர்களுக்கும் வயதாகின்றது. அவர்களின் சேவையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்காக ஜே.வி.பி.யின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.