சுதந்திரக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இரண்டு கட்சிகளும் இணையும் விதம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தைகளில் பிரதிபலன்களைளே அண்மையில் காண முடிந்தது. இரண்டு கட்சிகளின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இரண்டு கட்சிகளும் இணைந்தால், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற பெயரிலேயே இணைய வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் ஜனாதிபதி வேட்பாளர் இருக்க வேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடு எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த யோசனைக்கு இணங்க மறுத்து வருவதுடன் கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என திட்டவட்டமாக கூறி வருகிறது.