மைத்திரி போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது - சுமந்திரன்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவரால் வெற்றி பெற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் நேர்காணல் ஒன்றில் அவர் இதன கூறியுள்ளார்.

ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், அவர் போட்டியிடுவதும் ஒன்று போட்டியிடாமல் இருப்பதும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று வாக்குறுதியளித்தார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் மீண்டும் நடத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டார். இதனால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. மக்கள் சிந்திக்க தெரிந்தவர்கள். அவர்கள் அப்படியான தீரமானத்தை எடுக்க மாட்டார்கள் எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers