மைத்திரியை கொலை செய்ய திட்டமிடும் சிறைக்கைதிகள்! இன்று வெளிவந்துள்ள புதிய தகவல்

Report Print Sujitha Sri in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சிறைக்கைதிகள் சிலர் திட்டம் தீட்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலையிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருக்கிறார்.

இதனால் சிறைக்கைதிகள் சிலர் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக சிறைச்சாலையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers