இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் பெரிய பொறுப்பு இருக்கின்றது: சபாநாயகர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர், இளைஞர் மற்றும் யுவதிகள் பலர் நாட்டை கைவிட்டு செல்ல ஆரம்பித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அமரபுர பௌத்த பீடத்தின் அமரபுர தின நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர்,

பௌத்த தர்மத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் போது முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

சிறிய நாடாக இருந்தாலும் பௌத்த தர்மத்தை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.

சமய சகவாழ்வு ஏற்பட்டாலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியும். ஐக்கியம் இல்லாமல் போனால், நாட்டுக்கு எதிர்காலம் இல்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.