அடுத்த அமைச்சரவையில் ஜே.வி.பியும் இடம்பெற வேண்டும்: ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

அடுத்த அமைச்சரவை எந்த கட்சியின் தலைமையில் அமைந்தாலும் அந்த அமைச்சரவையில் மக்கள் விடுதலை முன்னணி அங்கம் வகிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு மூன்று முதல் நான்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகர்களுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு சிறந்த ஒழுக்கம் இருக்கின்றது. அர்ப்பணிப்பு இருக்கின்றது. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி நேர்மையானது.

அந்த கட்சியிடம் இந்த மூன்று குணங்களாலும் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அவர்களும் எங்களை போல் வயதாகிவிடும்.

இதனால், மக்கள் விடுதலை முன்னனிடம் மக்களுக்கான சேவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமான விடயம்.

இதனால், அடுத்த அமைச்சரவை எமது கட்சியின் அமைச்சரவையாக இருந்தாலும் எதிர்க்கட்சியின் அமைச்சரவையாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காக கட்டாயம் மக்கள் விடுதலை முன்னனியின் பங்களிப்பை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.