பொதுஜன பெரமுனவே நாட்டில் மிகப் பெரிய கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இலங்கையில் இருக்கும் மிகப் பெரிய அரசியல் கட்சி என்பதால், எந்த வகையிலும் சிறிய கட்சிகளின் பின்னால் சென்று கெஞ்சுவதற்கு தயாரில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

யார் எப்படியான கதைகளை கூறினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும். கட்சித் தலைவர்களிடம் மண்டியிட தயாரில்லை.

நாய் ஒன்றை விலைக்கு வாங்கும் போது, நாயின் இனம் பற்றி முழுமையாக விபரங்களை கேட்டறிவார்கள்.

ஆனால், நாட்டை ஆட்சி செய்யும் நபரை தெரிவு செய்யும் போது எதனையும் தேடுவதில்லை எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.