ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக்க முயற்சி

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டில் வாழ்ந்து வரும் இருபத்து இரண்டு லட்சம் முஸ்லிம்களையும் தீவிரவாதிளாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வில்பத்து காடு, மதரசா பாடசாலைகள், கல்வி முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்று விமர்சனங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த அனைத்து விடயங்களும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களின் கலாச்சார மாற்றத்திற்கு மஹிந்த ஆட்சிக் காலத்தில் வழியமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் இந்த விடயங்கள் பற்றி குரல் கொடுக்காத தரப்பினர், தற்பொழுது கடும்போக்குவாதத்தை தங்களது அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் வாக்குகளின் மட்டும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமித்துக் கொள்ள முடியும் என இந்ததரப்பினர் நினைக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுப் பற்று என்ற போர்வையில் இந்த தரப்பினர் இனவாதத்தை கக்கி வருகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.