ஐ.தே.கட்சியின் வேட்பாளர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபர் உலகில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் படித்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகில் உள்ள ஜனநாயக அடிப்படைகளை இலங்கையில் உள்ள சகல அரசியல் கட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.