தற்கொலை தாக்குதல் குறித்து விசாரணைகளுக்காக பிரதமர் ரணிலுக்கு அழைப்பு!

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றிருந்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் சபாநாயகர் எடுத்துள்ள தீர்மானங்கள் சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ள போதிலும் இதுவரையில் திகதிகள் நிர்ணயிக்கப்படவில்லை என நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.