தெரிவுகுழுவில் ஒருபோதும் முன்னிலையாக போவதில்லை! தயாசிறி ஜயசேகர திட்டவட்டம்

Report Print Murali Murali in அரசியல்

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எந்தவொரு விடையங்களையும் மறைப்பதற்கான தேவையும்

கிடையதது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாம் ஒருபோதும் தெரிவுக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை எனவும் அவர் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த தெரிவுக்குழுவில் சிலர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் தலைவர் என்ற வகையில் சபாநாயகருக்கு இந்தத் தெரிவுக்குழுவுக்கு ஆலோசனை வழங்க முடியும்.

எமக்கு எந்த விடயத்தையும் மறைப்பதற்கான தேவை கிடையாது. உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக என்று அமைக்கப்பட்டுள்ள இந்தத் தெரிவுக்குழுவின் விசாரணையினால் அந்த மக்கள் மீண்டும் தினந்தோறும் மரணித்துக்கொண்டு இருக்கின்றனர்.

கர்தினால்கூட இந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களினால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்று கூறியிருக்கின்றார்” என தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.