சரத் பொன்சேகாவிற்கு நேர்ந்த நிலை கோத்தபாயவிற்கும் நேரும்! விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள்

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு நேர்ந்த நிலைமையே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் நேரும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால் 2010ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவிற்கு ஏற்பட்ட நிலைமையே அவருக்கு ஏற்படும்.

இராணுவத் தலைவராகவே சரத் பொன்சேகா பார்க்கப்பட்டார். அதே நிலைமையே கோத்தபாயவிற்கும் ஏற்படும்.

கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டால் எமக்கு மிகவும் இலகுவாக அமையும், போட்டியிருக்காது என கூறியுள்ளார்.

அத்துடன், கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டாரா என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers