ரிசாத் பதியூதீன் விவகாரம்! மஹிந்த அணிக்குள் கடும் மோதல்

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கடும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையினை வெற்றி பெற எதிர்க்கட்சிக்கு சரியான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. எனினும் அதுரலிய ரத்தன தேரர் அதனை குழப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகே தெரிவித்தார்.

தேரரின் உண்ணாவிரதத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தவிர்த்துவிட்டதாகவும், றிசாத் பதியுதீன் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாகவும் ஆனந்த அலுத்கமகே சுட்டிக்காட்டினார்.

எனினும் அப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப செய்யக்கூடிய மிகச் சிறந்த செயற்பாட்டை தான் செய்ததாக அதுரலிய ரத்தன தேரா கூறினார்.

எவ்வாறாயினும், உண்ணாவிரதம் அரசாங்கத்தை தோற்கடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அலுத்கமகே மீண்டும் வலியுறுத்தினார். ஏனைய உறுப்பினர்களும் உண்ணாவிரதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஆத்திரமுற்ற மஹிந்த, இரு தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறும் கடந்த காலத்தைப் பற்றி பேசுவதும், செய்ய வேண்டியவை குறித்து விவாதிப்பதும் அர்த்தமற்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக கடும் கோபம் அடைந்த அதுரலியே ரத்தன தேரர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ சமாதானம் செய்ய முயன்ற போதும் பலனளிக்க வில்லை என தெரிய வருகிறது.

Latest Offers