தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டால் ஜனாதிபதியும் சென்று வாக்குமூலத்தை வழங்க வேண்டும்

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டால் ஜனாதிபதியும் சென்று தமது வாக்குமூலத்தினை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி இதன்போது உண்மையான விடயங்களை அங்கு தெரிவிக்க முடியும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் வைத்து கூறும் போது தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற தெரிவுக்குழு இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே செயற்படுத்தப்படுகின்றது.

எனவே அந்த பரிந்துரைக்களின் அடிப்படையில் செயற்படுகின்ற ஒரு நாடாளுமன்ற குழுவில் தாமே சென்று வாக்குமூலம் வழங்குவதில் எவ்வித தடங்களும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers