அரசியல் அமைப்பினை மீறிய ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பது இலங்கையில் மட்டுமே

Report Print Kamel Kamel in அரசியல்

அரசியல் அமைப்பினை மீறிய ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பது இலங்கையில் மட்டுமேயாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

உலகின் வேறு எந்த நாட்டிலேனும் இவ்வாறு அரசியல் அமைப்பினை மீறி செயற்பட்டிருந்தால், ஏனைய கட்சிகள் இணைந்து ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

மைத்திரி – மஹிந்த இணைந்து 51 நாட்கள் ஆட்சி நடத்திய சதித் திட்டத்தையே நாம் முறியடித்தோம்.

எனக்கு வழங்கப்படவிருந்த அமைச்சு பதவியை ஜனாதிபதி வேண்டுமென்றே தடுத்து நிறுத்தினார்.

நாட்டில் ஜனநாயகத்தை மீறும் பிரதான நபராக ஜனாதிபதி திகழ்கின்றார்.

அரசியல் அமைப்பினை மீறி செயற்பட்டவரை நாம் அதிமேதகு, மேன்மைதாங்கிய என்று இன்னும் புகழ்ந்து பாராட்டி வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers