ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கைகளை கழுவிக்கொள்ள முடியாது: ஹிருணிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான பொறுப்பை பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் மீது சுமத்தி விட்டு, தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் கைகளை கழுவி கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ச காலத்தில் தொலைபேசி மூலம் இயக்கப்பட்ட நீதிமன்றம், தற்போதைய நல்லாட்சியின் கீழ் சுயாதீனமாக செயற்பட்டு வருகிறது. தொடர்ந்தும் கிடைத்து வரும் நீதிமன்ற தீர்ப்புகள் இதனை உறுதிப்படுத்தி வருகின்றன.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்று நான்கரை ஆண்டுகளில் நீதிமன்றத்தின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் உருவான பின், நானும் நீதிமன்றத்தில் நியாயமான தீர்ப்பை பெற்றுக் கொண்டேன்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான வழக்கில், பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு பிணை வழங்கிய நீதவான், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் கைகளை கழுவி கொள்ள முடியாது.

தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை மறைத்து சில ஊடகங்கள் செயற்பட்டாலும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

முப்படை தளபதி, பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி தெளிவாக இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் சாட்சியங்களில் இது தெளிவாக தெரிந்தது எனவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers