அதிகாரம் எனக்கே வழங்கப்பட்டுள்ளது! மகிந்த தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிரணி வேட்பாளரை நிறுத்தும் அதிகாரம் தனக்கு வழங்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், பசில் ராஜபக்ச, கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாட்டின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ள சந்தர்ப்பத்தில், ஒழுக்கமான நாட்டை உருவாக்கி, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அனைத்து இன மக்களுக்கும் பாதுகாப்பை வழங்கக் கூடிய தலைவர் தேர்தலில் நிறுத்தப்படுவார்.

குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளாலும் மக்களே துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அரசாங்கம் வேண்டும் என்றே இன மற்றும் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதன் பின்னணியில் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அரசாங்கத்தின் உள்நோக்கத்தை தோற்கடித்து எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் வெற்றி பெறும் இயலுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers