கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்

Report Print Kamel Kamel in அரசியல்

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டமொன்ற முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்தக் கோரி கல்முனையில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தலையிட்ட அரசாங்கம் ஒரு மாத காலத்தில் தீர்வு வழங்குவதாகக் கூறியிருந்தது. எனினும் அதுகுறித்து சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்தார்.

அத்துடன்இ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தங்களுக்கு முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் போய்விடும் என்பதனால் கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்தாமல் ஐக்கிய தேசிய கட்சி இந்த விவகாரத்தை இழுத்தடிப்புச் செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சியின் செயலாளர் ருவான் திலக்க பேதுரு ஆராச்சி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பனர் ஆறுமுகன் ஜோன்சன், கல்முனை பிரதேச மக்கள் சார்பாக சின்னையா ராகவன் அந்தக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், கொழும்பு பிரதேச உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Latest Offers