நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ள நாடாளுமன்றம்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரம் அரசாங்கத்தின் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சமுர்த்தி திட்டம், அரசியல் திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் வறுமையை ஒழிக்க ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி திட்டத்தின் மூலம் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே நிவாரணங்கள் வழங்கப்படுகிறது.

மூவாயிரம் லட்சம் ரூபாய் சமுர்த்தி நிதியத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரச பணம் செலவிடப்படுவதில்லை எனக் கூறும் அமைச்சர், 450 ரூபாவுக்கு அச்சிட்ட டி சேர்ட்டை வழங்குவது குற்றமா என்று கேட்கிறார்.

மூவாயிரம் லட்சம் என்பது இவர்களுக்கு சாதாரண செலவு. ஊழல், மோசடி, வீண் விரயங்களுக்கு எதிராக செயற்பட போவதாக கூறியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இதனால், கடந்த அரசாங்கத்தை சேர்ந்த பலர் அரச பணத்தை வீண் விரயமாக்கியதாக கூறி, நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு அழைத்து விசாரணை நடத்தி, வழக்கு தொடர்ந்தனர் எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தை நீதிமன்றமாக மாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த, விசேட தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ஆளும், கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து கோரியதால், அதனை நியமித்ததாக சபாநாயகர் கூறினார். சபாநாயகர் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.

அவர் நாடாளுமன்றத்தை நீதிமன்றமாக மாற்றிக்கொண்டார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முழு நாட்டு மக்களுக்கு குற்றம் சுமத்தும் நபர்களை விடுதலை செய்ய தயாரானார்கள்.

இது திருடனின் தாயாரிடம் மை வெளிச்சம் பார்ப்பதை போன்றது. மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பவம் பற்றி தெரியாது, ஞாபகம் இல்லை என்று கூறியவர்களே தெரிவுக்குழுவில் விசாரணை நடத்துகின்றனர்.

Latest Offers