நாளை உதயமாகின்றது புதிய அரசியல் கூட்டணி!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி மலையகத்தில் நாளை உதயமாகவுள்ளது

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“புதியதொரு அரசியல் கூட்டணி தொடர்பிலான் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ளது. இது குறித்த நிகழ்வு கொட்டகலை சி.எல்.எப். கேட்போர் கூடத்தில் நாளை முற்பகல் இடம்பெறவுள்ளது.

கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முக்கிய சில அரசியல் பிரமுகர்கள் புதிய கூட்டணியில் இணைவார்கள். குறிப்பாக இ.தொ.காவிலிருந்து வெளியேறிய சிலர் மீண்டும் திரும்பவுள்ளனர்.

நாளை ஏற்படுத்தப்படும் புதிய கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள் இடம்பெறும் என என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் அந்த ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய கூட்டணி அமையும் என்றும், கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அரசியல் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்படவுள்ளன என்றும்” அந்த பிரமுகர் சுட்டிக்காட்டினார்.

Latest Offers