ரணில் அரசின் தலைவிதி நாளை! ஆட்டம் காணுமா அரசு?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான விவாதம் நாளை மாலை வரை தொடரும்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தையடுத்து நாளை மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பொது எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுக்கவுள்ளனர்.

Latest Offers