உதயமானது புதிய தேசிய கூட்டணி! கைச்சாத்திடப்பட்டது ஒப்பந்தம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணியொன்று கொட்டகலையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணியை அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் கலந்து கொண்டன.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தேசிய கூட்டணி அங்குராப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது இந்த தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றின் பொது செயலாளர்கள் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பொதுச் செயலாளர் அனுஷா சிவராஜா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் சுரேஷ் கங்காதரன் ஆகியோர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

Latest Offers