அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தயாராகும் மைத்திரி தரப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தாலும் அதனை வெற்றி பெறச் செய்வதற்கான எந்த அக்கறையும் அந்த முன்னணியிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனோ கலந்துரையாடவில்லை.

எனினும் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளோம். அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

எனினும் அரசாங்கத்திற் எதிரானவர்கள் என காட்டிக்கொள்ளும் சிலர், அரசாங்கத்தை பாதுகாகக் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.