அமைச்சர் ரிசார்ட்டுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் மேற்கொண்டுள்ள ஊழல், மோசடிகள் சம்பந்தமாக உரிய விசாரணைகளை நடத்துமாறு கோரி, கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ரிசார்ட் பதியுதீன், சதோச நிறுவனத்தில் 50 ஆயிரம் லட்சத்திற்கும் மேலான பணத்தை மோசடி செய்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இங்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக,

சதோச களஞ்சியங்களில் 80 ஆயிரம் மெற்றி தொன் அரிசி, கையிருப்பில் இருக்கும் போது, ஒரு லட்சம் மெற்றி தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரிசியை 15 மாதங்கள் களஞ்சியத்தில் வைக்கப்பட்டு, பயன்படுத்த உகந்தது அல்ல எனக் கூறி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், 50 ஆயிரம் லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அரிசியை எடுத்துச் செல்ல கேள்வி மனு நடைமுறைகளை பின்பற்றாது ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதால், 2 ஆயிரத்து 670 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் டி.வி.சானக்க குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் இலஞ்ச ஆணைக்குழுவில் இதுவரை 12 முறைப்பாடுகளை செய்துள்ளது. சுயாதீன பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சானக்க மேலும் தெரிவித்துள்ளார்.


you may like this video

Latest Offers