திடீரென மைத்திரியின் முக்கியஸ்தர் மகிந்த அணிக்குத் தாவினார்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் மேல் மாகாண சபையின் முன்னாள் அவை தலைவருமான சுனில் விஜேரத்ன, இன்று பொதுஜன பெரமுனவில் இணைந்து, அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

கட்சியின் தற்போதைய தலைவர்களின் செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளுக்கு நாள் மக்களிடம் இருந்து தூர விலகி வருவதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் விஜேரத்ன கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக உழைக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணி உறுப்பினர்களின் பலர், ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதியின் செயற்பாடுகளால், கட்சி பலவீனமடைந்துள்ளதுடன் கட்சியினரும் பலவீனமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

Latest Offers