பிரதான பொறுப்பு மைத்திரியிடம் தான்! தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரியுங்கள்: அனுரகுமார திசாநாயக

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விடயத்தில் பிரதான பொறுப்பு ஜனாதிபதி மைத்திரியே சாரும். எனவே அவரை தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் " உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கே அதிக பொறுப்புகள் உள்ளன, பாதுகாப்பு பலவீனமே இவை அனைத்திற்கும் காரணம் எனப் பேசினார்.

இதன்போது குறிக்கிட்டு ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அனுரகுமார திசாநாயக, இந்த பயங்கரவாத தாக்குதல் விடயத்தில் பிரதான பொறுப்பு ஜனாதிபதியையே சாரும். அதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்த விசாரணைகளை நடத்த தற்போது நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதியை வரவழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Latest Offers