நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது சபைக்கு வராத 9 உறுப்பினர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த துமிந்த திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, துனேஷ் கன்கந்த, எஸ்.பி.நாவின்ன, டக்ளஸ் தேவானந்தா, அசோக பிரியந்த, சிவசக்தி ஆனந்தன், ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் சபைக்கு வருகை தரவில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது. யோசனைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யோசனைக்கு எதிராக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers