வழமை போன்று ரணில் திருகுதாளம்! கூட்டமைப்பு மூலம் எவ்வாறு வென்றார்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ரணில் விக்ரமசிங்க வழமைபோன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றம்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு மீண்டும் ரணில் விக்ரமசிங்க தப்பித்துக் கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அனுரகுமார,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவும் சரியான ஒரு தீர்மானம் எடுத்திருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் வெற்றிகொண்டிருக்க முடியும்.

ஆனால் பிற்பகல் 4.30 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேசசபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

எழுத்துமூல வாக்குறுதிகளை அடுத்தே கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழைமை போன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டார். அகவே இவர்கள் அரசாங்கத்தை கப்பம் மூலமாகவே காப்பாற்றியுள்ளனர். இல்லையென்றால் 119 வாக்குகள் கிடைதிருக்காது என்றார்.

Latest Offers