அரசியலை விட்டு விலகத் தயார்: ரிசாட்

Report Print Kamel Kamel in அரசியல்

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகத் தயார் என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் ரிசாட் பதியூதீன் ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரிசாட் பதியூதீனுக்கு 11000 ஏக்கர் காணி உள்ளது என எஸ்.பி. திஸாநாயக்க நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இவ்வாறு 11000 ஏக்கர் காணி தமக்கு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து விலகிக் கொள்வதாக ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்ய முடியாவிட்டால் எஸ்.பி. திஸாநாயக்க அரசியலை விட்டு வெளியேற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த எஸ்.பி. திஸாநாயக்க “ரிசாட்டின் குடும்ப உறுப்பினர்களது பெயரில் 11000 ஏக்கர் காணி உள்ளதாகவும் அதற்கான காணி உறுதிப்பத்திரங்கள் பற்றிய ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


you may like this video

Latest Offers