மனம் மாறினர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்க முடிவு!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் முஸ்லிம்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்து, முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.

பதவியை ராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீளவும் தங்களது பதவிகளை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கபீர் ஹாசீம் மற்றும் ஹாலீம் ஆகியோர் ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை மீளவும் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயும் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூடி கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.