Oops. Something went wrong. Please try again later
Desktop

மட்டக்களப்பு மாநகரசபையின் 21ஆவது அமர்வு

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு மாநகரசபையின் 21ஆவது அமர்வு மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மேலும் கடந்த அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சில திருத்தங்களுடன் இன்றைய தினம் கூட்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் மாநகரசபைக்குள் முன்னெடுக்கப்பட்ட முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக இருந்த தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர் சோமசுந்தரத்தின் பதவி கட்சியின் செயலாளரினால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், குபேரன் என்பவர் அக்கட்சியினால் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகரசபை நடவடிக்கையில் இன்று கலந்துகொண்டுள்ளார்.

உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்டுள்ள முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டன. இதன்போது கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்நீர்த்தவர்களுக்கு நினைவுத்தூபியொன்றை அமைக்க நடவடிக்கையெடுக்குமாறு உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் நினைவுத்தூபியொன்றை அமைக்க நடவடிக்கையெடுக்குமாறு மாநகரசபை உறுப்பினர் என்.திலீப்குமார் முன்வைத்த முன்மொழிவுகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

கடந்த அமர்வில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவாக தூபி அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது அந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுவரும் நிலையில், மேலும் ஒரு தூபி அமைக்கப்படவேண்டிய அவசியம் இல்லையென கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Latest Offers