இலங்கை தமிழர்கள் மீது மேற்கு வங்க எம்.பி கொண்டுள்ள கரிசனை!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையிலிருந்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்த தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

அந்த கட்சியின் மக்களவை உறுப்பினர் அகமது ஹசன் இது குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்ததுள்ளது.

அதேபோன்று இலங்கையிலிருந்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க ஆவண செய்ய வேண்டும்.

இல்லையென்றால், அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.