மைத்திரியின் பேச்சை மீறும் ரணில் தலைமையிலான அரசு? தீவிரமடையும் மோதல்

Report Print Murali Murali in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்து வரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முக்கிய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடையலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடமையில் இருக்கும் அரச படை கட்டமைப்புக்களிலுள்ள அதிகாரிகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் முன்னிலையாக தான் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை பொருட்படுத்தாது நாடாளுமன்ற தெரிவுக் குழு படை அதிகாரிகளை அழைத்திருப்பதாலேயே இந்த மோதல் நிலை தீவிரமடையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 260க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது. இந்நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்குதல் சம்பவம் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஷாந்த கோட்டேகொட, கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீன் உள்ளிட்ட பலரையும் அழைத்து விசாரணைகளை நடத்தியிருந்தது.

இந்நிலையில், தாக்குதல்கள் குறித்த புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் முக்கிய பிரிவுகளின் தலைமை அதிகாரிகளை விசாரணைக்காக அழைத்திருதிருக்கின்றது.

இது குறித்த விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவற்றை காணொளி செய்வதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடமையில் இருக்கும் அரச படைக் கட்டமைப்புக்களிலுள்ள அதிகாரிகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் முன்னிலையாக தான் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை மீறி தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முக்கிய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடையலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers