ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படும்

Report Print Ajith Ajith in அரசியல்
42Shares

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது பங்காளி கட்சிகளுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் 11ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற மாநாட்டுக்கான அழைப்பினை விடுத்துள்ளது.

இந்த மாநாட்டின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.

எனவே அந்த மாநாட்டுக்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சி ஏனைய பங்காளி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளுடன் தமது கட்சி தொடர்ந்து நல்லுறவை பேணக் கூடிய வகையில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்ளும் என்றும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.