அமெரிக்க இராணுவம் இலங்கையில் தலையிட அனுமதி வழங்கிய கோத்தபாய: சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்
91Shares

அமெரிக்க பிரஜையான கோத்தபாய ராஜபக்ச தற்போதும் அமெரிக்க பிரஜையாக இருந்து வருகிறார் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்கரான கோத்தபாய ராஜபக்ச மற்றுமொரு அமெரிக்கரான ரொபர்ட் ஓ பிளேக்குடன் கடந்த 2007ஆம் ஆண்டு செய்துக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய அமெரிக்க இராணுவத்தின் அணி ஒன்று இலங்கையில் தலையீடுகளை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாயவும் ரொபர்ட் ஓ பிளேக்கும் செய்து செய்துக்கொண்ட இந்த உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. அத்துடன் அமைச்சரவைக்கும் சமர்பிக்கப்படவில்லை.

எனினும், தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கை அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் இராணுவத்தினர் எங்கெல்லாம் செல்வார் என்பதும் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை கட்டியெழுப்ப ரொபர்ட் ஓ பிளேக்கு பணம் கொடுத்து, அழைத்து வந்து உரையாற்ற வைத்தமை தொடர்பாக விமல் வீரவங்ச உட்பட அமெரிக்க எதிர்ப்பாளர்கள் என்ன கூற போகின்றனர் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.