எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்த ரிசாட்

Report Print Steephen Steephen in அரசியல்
75Shares

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கும் ரிசாட் பதியூதீனுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றத்தில் சூடான வாக்குவாதம் நடந்துள்ளது.

ரிசாட் பதியூதீனுக்கு 11 ஆயிரம் ஏக்கர் காணி இருப்பதாக எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தியதை அடுத்தே இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தனக்கு சொந்தமான 11 ஆயிரம் ஏக்கர் காணி இருப்பதை நிரூபித்தால், அரசியலில் இருந்து விலகி விடுவதாக ரிசாட் பதியூதீன் கூறியுள்ளார்.

அப்படி நிரூபிக்க தவறினால், எஸ்.பி.திஸாநாயக்க, அரசியலில் இருந்து விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட எஸ்.பி.திஸாநாயக்க,

11 ஆயிரம் ஏக்கர் காணி, ரிசாட் பதியூதீனின் தாய், மனைவி, சகோதரர் என குடும்பத்தினரின் பெயர்களில் இருப்பதாகவும் காணி உறுதிகள் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். எனினும் நிரூபிக்கும் நாள் பற்றி கூறவில்லை.

இதனையடுத்து, தான் திருடன் அல்ல எனவும் எஸ்.பி.திஸாநாயக்க, திருடன் என ரிசாட் பல முறை கூறியுள்ளார்

இதற்கு முன்னர், ரிசாட் பதியூதீன், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கும் இப்படியான சவால் ஒன்றை விடுத்திருந்ததுடன், எனினும் பதிலளிக்காது வீரவங்சவும் தற்போது அமைதியாக இருந்து வருகிறார்.