மரண தண்டனையை ஒழிக்கும் யோசனை நாடாளுமன்றில் இன்று

Report Print Steephen Steephen in அரசியல்

மரண தண்டனை ஒழிக்கும் யோசனை ஒன்று இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட, தனிப்பட்ட உறுப்பினரின் யோசனையாக இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் கடந்த 1977ஆம் ஆண்டில் இருந்து மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், போதைப்பொருள் சம்பந்தமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த போவதாக அறிவித்துள்ளார்.

அத்துடன், நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை மீண்டும் அமுல்படுத்தப்படுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.