மக்கள் தீர்மானங்களை சரியாக சிந்தித்து பார்த்து எடுக்க வேண்டும்: அமைச்சர் சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

பொது மக்களுடன் அரசியல் உடன்பாட்டை ஏற்படுத்துவோர் மற்றும் தமது குடும்பம், நண்பர்கள், நெருங்கிய நட்பு சங்கங்களுடன் உடன்பாட்ட ஏற்படுத்துவோர் என இரண்டு தரப்பினர் அரசியல் துறையில் இருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம, ரணகெலிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட செனவிராஜகம என்ற புதிய கிராமத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொது மக்களுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்வோர், மக்களுக்கு காணி, வீடு, தொழில் வாய்ப்புகளை வழங்கி, கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பார்கள்.

எனினும் தமது குடும்பம், குடும்ப நண்பர்களுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்வோர், குடும்பத்தினர் சுகபோகமாக வாழ அரச வளங்களை தவறாக பயன்படுத்தி, தரகு பணத்தை பெற்றுக்கொள்வார்கள்.

சரியான உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் நபரை அதிகாரத்திற்கு கொண்டு வரும் வாய்ப்பு எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்கும். மக்கள் தீர்மானங்களை எடுக்கும் போது, நன்கு சிந்தித்து பார்த்து சரியாக எடுக்க வேண்டும்.

மக்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய அதன் சாதக, பாதங்களை மக்கள் எதிர்காலத்தில் அனுபவிக்க முடியும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.