நாடாளுமன்ற தெரிவுக்குழுவு விசாரணைக்கு தயாராக இருக்கிறேன்! ரணில் தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகி விளக்கமளிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இதுவரை பலர் விசாரணைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற தெரிவுக்குழு சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும், அது சட்ட ரீதியானது என்பதை நீதிமன்றத்தினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்.

அரசாங்கத்துக்கு எதிரான கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்து அடிப்படையற்றது என்பது அது தோற்கடிக்கப்பட்டதன் மூலம் தெரியவந்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் போது முக்கிய விடயங்கள் பல நாட்டுக்கு தெரிய வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.