தமிழ் மக்களின் வாக்குகளால் தான் இத்தனை ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் இருக்கிறேன்! ஜோன் அமரதுங்க

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழ் மக்களின் வாக்குகளாலேயே நான் இத்தனை வருடகாலம் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகி சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன் என சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அருண் பிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகத்தினால் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலைக்கான காணி கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படுதலும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் அப்பாடசாலைக்கு வழங்கப்படும் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது பேசிய அவர்,

தமிழ் மக்களின் வாக்குகளாலேயே நான் இத்தனை வருடகாலம் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகி சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான எனது கௌரவத்தை வெளிப்படுத்துவதுடன், நாமனைவரும் இன,மத பேதமின்றி ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.