இணைந்து போட்டியிட்டால் வெற்றி எமக்கே! டிலான் பெரேரா

Report Print Kanmani in அரசியல்

மீண்டும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாக இருந்தால் அதனூடாக ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயமாக தோற்றகடிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவு காரணமாகவே அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது என மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவு காரணமாகவே அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயமாக அரசாங்கத்தால் வெற்றிப்பெற்றிருக்க முடியாது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 70 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.

அவ்வாறாயின் அவர் 65 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ள கூடிய ஒருவராக இருக்க வேண்டும். கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலின் போது கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் இந்த 65 இலட்சம் வாக்குகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை மிக இலகுவாக தீர்மானிக்க வேண்டும்.

இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மாத்திரம் 50 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

ஆகவே 50 வீதமான வாக்குகனை பொதுஜன முன்னணியால் பெற்றுக்கொள்ள முடியும். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் சுந்திர கட்சியும் இணைந்து போட்டியிடுமாக இருந்தால் நிச்சயமாக தேர்தல் எங்களுக்கு சாதமாகவே அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.