இலங்கையில் தரம் குறைந்த மருந்துகளை பாவிக்கும் மக்கள்

Report Print Sindhu Madavy in அரசியல்
63Shares

நாட்டில் இன்றளவிலும் மக்கள் தரம் குறைந்த மருந்துகளையே பயன்படுத்துகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்தியாவிலிருந்து கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு இறக்குமதி செய்த அதிக அளவான மருந்துக்கள் தரம் குறைவானவையாகவும், காலாவதியானதாகவும் காணப்பட்டது.

பத்து கோடி பெறுமதியான காலாவதியான மருந்துகளை கொண்டுவரும் அரசாங்கம் ஐந்து கோடி ரூபாய் செலவில் மருந்து பரிசோதனை மையம் ஒன்றினை உருவாக்க முடியாதா.

ஏன் மருந்து நிறுவனங்களின் நலன்களுக்காக மக்களை கொல்கின்றீர்கள். இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளை சுற்றியுள்ள மருந்தகங்களில் எத்தனை மருந்தகங்களுக்கு அனுமதிப்பத்திரம் உள்ளது.

அரச மருந்தகங்களில் அதிகமானவை அனுமதிப்பத்திரம் இல்லாதவையாகும். சுகாதார அமைச்சரின் மாவட்டத்தில் உள்ள 15 அரச மருந்தகங்களில் 12 மருந்தகங்கள் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வருகின்றது.

இலங்கையில் மருந்து மாபியா பரவியுள்ளது. மருந்து நிறுவனங்களின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டு பாரிய மருத்துவ மாபியாவையே நடத்தி வருகின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்