நாட்டின் தலைவராக சிங்கள பௌத்த தலைவரை தெரிவு செய்ய வேண்டும்: ஞானசார தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

சிங்கள பௌத்த தலைவரை நாட்டின் தலைவராக தெரிவு செய்ய பௌத்த சங்க சபையினர் இணைந்து செயற்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

வெயங்கொடையில் இன்று நடைபெற்ற பௌத்த மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தலைவராக முதுகெலும்புள்ள சிங்கள பௌத்த தலைவரை தெரிவு செய்ய வேண்டும். நாட்டை சிங்கள ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும்.

சிங்களவர்கள் இணைந்து எமது தாய் நாட்டை பாதுகாக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers