தேரர்களை இழிவுபடுத்தியவர்களை தண்டிக்க வேண்டும்: மஹிந்த

Report Print Kamel Kamel in அரசியல்

பௌத்த தேரர்களை இழிவுபடுத்தியவர்களை இந்த நாட்டின் தலைமைகள் தண்டிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

காலி - போத்தல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இன்று இலங்கையில் வணக்கத்திற்குரிய பௌத்த தேரர்களை போன்று துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் தரப்பினர் வேறும் எவரும் கிடையாது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பௌத்த தேரர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டும் பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு இலக்காகியும் உள்ளனர்.

பௌத்த தேரர்கள் மட்டுமன்றி ஏனைய மதத் தலைவர்களும் இழிவுபடுத்தப்படுகின்றனர். அண்மையில் பிரதி அமைச்சர் ஒருவர் பௌத்த தேரர்களை இழிவுப்படுத்தியுள்ளார்.

இது தற்செயலாக இடம்பெறும் செயலாக கருதப்பட முடியாது, இது பௌத்தர்களை ஆத்திரப்படுத்தி குழப்பம் விளைவிக்கும் நோக்கிலானது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் பௌத்த தலைவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் அது பௌத்த மதத்திற்கும், நாட்டுக்கும் செய்யும் இழிவாகவே கருதப்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Latest Offers