ராஜபக்சவினரின் முடிவால் மைத்திரியின் நோக்கம் நிறைவேறாமல் போகும் நிலை

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜபக்சவினர் ஆறு பேர் இணைந்து எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து உருவாகும் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கம் நிறைவேறாமல் போகும் நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ச வெளியிட்டுள்ள தகவலே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச ஒருவர் போட்டியிடுவாராக இருந்தால், கோத்தபாய ராஜபக்சவையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சஷீந்திர ராஜபக்ச கூறியிருந்தார்.

தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள ராஜபக்சவினர் ஆறு பேர் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, மகிந்த ராஜபக்ச இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பட்டியலில் தனது தந்தையான சமல் ராஜபக்சவின் பெயர் இருந்தாலும் கோத்தபாய ராஜபக்சவே வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும் என கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஆண்டு மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் இணைந்து எடுத்த தவறான அரசியல் முடிவு, அவரது அரசியல் ரீதியான பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால், மைத்திரிபால சிறிசேன, அரசியலில் இருந்து கௌரவமாக விலகி சென்றிருக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest Offers