மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்! ரஞ்சன் அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டி அவசியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையையும் தான் வெளியிடாததால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஒருபோதும் மகா சங்கத்தை அவமதிக்கும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. நான் கூறியது என்னவென்றால், ஒரு சில துறவிகள் மட்டுமே இரத்தத்திற்காக கத்துகிறார்கள், இந்த துறவிகளில் 90 சதவீதம் பேர் தலைமை துறவிகளால் வழி நடத்தப்படுகிறார்கள் என்றுதான்.

எனினும் நான் கூறிய கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனது அறிக்கையை அதன் உள்ளடக்கத்தை சிதைத்து திரிபுபடுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Latest Offers