நான் சாரை பாம்புகளை கொல்வதில்லை – டட்லி சிறிசேன

Report Print Steephen Steephen in அரசியல்

தான் சாரை பாம்புகளை கொல்வதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் பிரபல வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில், ரொஷான் ரணசிங்க இப்படியான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். ரொஷான் ரணசிங்கவை நானே அரசியலுக்குள் கொண்டு வந்தேன். ரொஷான் ரணசிங்க, ஒரு சாரை பாம்பு, நான் சாரை பாம்புகளை கொலை செய்வதில்லை எனவும் டட்லி சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

டட்லி சிறிசேன தன்னை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியிருந்தார். இது சம்பந்தமாக தான் செய்யும் முறைப்பாடுகளை பொலிஸாரும் ஏற்பதில்லை எனவும் பொலிஸார் சிறிசேனவினருக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Latest Offers