நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் அரசியல் தீர்வை வழங்க முடியவில்லை – யாழில் பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண கடந்த சில வருடங்களாக முயற்சித்த போதிலும் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால், அதனை செய்ய முடியாமல் போனது எனவும் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் கட்டாயம் அந்த நோக்கத்தை நிறைவேற்றி, அரசியல் தீர்வு வழங்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்கும் செயற்பாடுகளில் தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

பல இனங்களுடன் கூடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர், இங்கிலாந்து பிரஜைகளாக விளையாடி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளாக பல இனங்களுடன் ஒத்துழைப்புடன் வாழ்ந்த நாம், இலங்கையர்களாக சிந்திக்க வேண்டிய காலம் வந்துள்ளது. எந்த இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை விரும்புகிறோம். அனைவரும் ஒரே விதமாக சிந்திக்க வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

Latest Offers