ஜனாதிபதித் தேர்தலில் பிரதான பங்கு பசில் ராஜபக்சவிற்கு – ஜீ.எல்.பீரிஸ்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பணிகளில் பிரதான பொறுப்பை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவே வகிப்பார் என அந்த கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளும். அது மிகவும் கவர்ச்சிகரமான முறையில் முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் முழுமையான அதிகாரம் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் அறிவிக்கும் வேட்பாளர் பின்னால், அனைவரும் அணித்திரள்வார்கள்.

அத்துடன் அந்த வேட்பாளர் வெற்றி பெறுவார். நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன வெற்றி பெறும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers