தூக்குத்தண்டனையினை விட சீர்திருத்த தண்டனைகளே சிறந்த சமூகத்தினை உருவாக்கும்

Report Print Kumar in அரசியல்

இந்த அரசாங்கத்தினை வீழ்த்துவதன் ஊடாக இதனைவிட சிறந்த, திறமையான, சாதகமான அரசாங்கத்தினை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கத்தினை அகற்றிவிட்டு உருவாக்கும் அரசாங்கம் இந்த நாட்டினை அதன் பாதாளத்திற்கு கொண்டுசெல்லும் என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவினை நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனை தொடர்பிலும், தூக்குத்தண்டனை தொடர்பிலும் மட்டுமே ஜனாதிபதி தனது கவனத்தினை செலுத்தப்பட்டுள்ளது. தூக்குத்தண்டனையினை விட சீர்திருத்த தண்டனைகளே சிறந்த சமூகத்தினை உருவாக்கும்.

இன்று கடந்த கால ஆட்சியாளர்களை மீண்டும் கொண்டுவருவதற்காக கடந்த கால ஆட்சியில் சுகபோகங்களை அனுபவித்தவர்கள் புதிய கட்சிகளை ஆரம்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தமிழர்களின் போராட்டத்தினை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று வேறு வடிவங்களில் தமிழர்களின் ஒற்றுமையினை சீர்குலைக்க முனைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers